
கங்ஙார், செப்டம்பர்-6,பெர்லிஸ், கங்காரில் நடைபெற்ற ‘Satu Suara, Seribu Warna’ திட்டத்தின் கீழ், நாடு முழுவதிலும் உள்ள 33,548 Tabika Perpaduan பாலர் பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் வண்ணம் தீட்டும் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.
Nadi Sihat அமைப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமை ஒருங்கிணைப்புத் துறையின் (JPNIN) இணை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தச் சாதனை, மலேசிய சாதனைப் புத்தகத்தில் (MBOR) இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் உரையாற்றிய தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங், கலை மற்றும் கலாச்சாரம் வழியே சிறுவயதிலேயே ஒற்றுமை உணர்வையும் தேசிய அடையாளத்தையும் வளர்க்க முடியும் எனக் கூறினார்.
மேலும், ஒற்றுமையைப் பேணுவது அரசாங்கம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பெற்றோர்களின் கூட்டுப் பொறுப்பாகும் என அவர் சுட்டிக்காட்டினார்



