Latestமலேசியா

3R அம்சங்கள் தொடர்பான பழைய வீடியோ மீது போலீஸ் புகார்; ரத்தான சிங்கப்பூர் கலைஞரின் stand-up காமெடி நிகழ்ச்சி

பெட்டாலிங் ஜெயா, மே-18 – இன்று இரவு சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற வேண்டிய சிங்கப்பூர் கலைஞர் Sharul Channa-வின் stand-up நகைச்சுவை நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

தனது பழையக் காணொலிகளில் ஒன்றில், 3R எனப்படும் இனம்-மதம்-ஆட்சியாளர்கள் தொட்டு அவர் பேசியிருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து, இன்றைய நிகழ்ச்சி ரத்தாகியுள்ளது.

தனக்கு வேலைக்கான விசா அனுமதி கிடைத்திருந்த நிலையில், அப்புகாரை அடுத்து போலீசும், வெளிநாட்டு கலைஞர்களின் படப்பிடிப்பு மற்றும் கலைநிகழ்ச்சிக்கு விண்ணப்பிக்கும் மத்திய நிறுவனமான Puspal-லும் கடைசி நேரத்தில் அதனை ரத்துச் செய்ததாக Sharul Channa கூறினார்.

தனது மேடை நிகழ்ச்சியில் அந்த 3R அம்சங்கள் இடம் பெறாது என்ற உத்தரவாதத்தை வழங்கியும், அது ரத்தாகியிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக ரசிகர்களுக்காக தனது சமூக ஊடகத்தில் பதிவேற்றிய காணொலியில் அவர் சொன்னார்.

குறிப்பாக நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை வாங்கிய ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார்.

‘Just Joking’ என்ற தலைப்பில் stand-up மேடை நகைச்சுவையில் இன்றிரவு PJ Live Arts Centre-ரில் சில உள்ளூர் கலைஞர்களுடன் இணைந்து Sharul பங்கேற்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

இவ்வேளையில் டிக்கெட் வாங்கிய இரசிகர்களுக்கு ஏற்பாட்டாளர்கள் இரு தேர்வுகளை வழங்கியுள்ளனர்.

இரு வாரங்கள் காத்திருந்து பணத்தைத் திரும்பப் பெறலாம் அல்லது டிக்கெட்டில் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் அதே இடத்தில் ஆனால் உள்ளூர் கலைஞரின் படைப்பைக் கண்டு களிக்கலாம் என்பதே அவ்விரு தேர்வுகளாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!