Latestமலேசியா

3R நிந்தனை அம்சங்களைப் பரப்புவோருக்கு MCMC கடும் எச்சரிக்கை

சைபர்ஜெயா, மே-4-இனம், மதம் மற்றும் ஆட்சியாளர்கள் தொடர்பான 3R விவகாரங்களில் சினமூட்டும் கருத்துகளைப் பரப்புவோருக்கு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில், இணையத்தளங்களில் அவதூறான அல்லது வெறுப்பைத் தூண்டும் கருத்துகளைப் பதிவிடுவதைத் தவிர்க்குமாறு பொது மக்களை அது அறிவுறுத்தியது.

1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 லட்சம் ரிங்கிட் வரை அபராதம், 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம் எனவும் MCMC எச்சரித்துள்ளது.

இது போன்ற நிந்தனைப் பதிவுகளைக் கண்காணிக்க அரச மலேசிய போலீஸ் படையுடன் MCMC நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறது.

எனவே, எந்தவொரு தகவலையும் பகிரும் முன் அதன் உண்மைத்தன்மையை உறுதிச் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தவறான பதிவுகள் குறித்து MCMC-யின் அதிகாரப்பூர்வ புகாரளிப்புத் தளத்தில் பொது மக்கள் புகார் அளிக்கலாம் எனவும் அறிக்கை வாயிலாக அவ்வாணையம் தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!