Latestமலேசியா

சென்னை விமான நிலையத்தில் ஓடும் விமானத்திலிருந்து குதித்த 29 வயது பயணி; மனநல பாதிப்பா?

சென்னை, மே-3-பயணி ஒருவர், அவசர கால கதவைத் திறந்து ஓடும் விமானத்திலிருந்து குதித்ததால், சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று அதிகாலை பெரும் பரபரப்பு நிலவியது.

ஷார்ஜாவிலிருந்து 231 பயணிகளுடன் வந்த ஏர் அரேபியா விமானம் G9-471, அதிகாலை 3.20 மணியளவில் தரை இறங்கியது.

விமானம் ஓடுபாதையில் மெதுவாகச் சென்று கொண்டிருந்தபோது, புதுக்கோட்டையைச் சேர்ந்த 29 வயது முஹமட்த ஷெரீப் என்பவர் திடீரென அவசர கால கதவைத் திறந்து வெளியே குதித்தார்.

​இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விமானி, உடனடியாக விமானத்தை நிறுத்தினார்.

இந்தச் சம்பவத்தால் பாதுகாப்பு கருதி முதன்மை ஓடுபாதை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மூடப்பட்டது.

இதனால் லண்டனிலிருந்து வந்த ஒரு அனைத்துலக விமானம் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டது.

தப்பியோட முயன்ற அந்தப் பயணியைப் பாதுகாப்புப் படையினர் மடக்கிப் பிடித்தனர்.

இதில் அவருக்கு இலேசான காயம் ஏற்பட்டது.

விசாரணையின் போது, தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் பயந்ததாகவும், மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும் அவர் கூறியதாகத் தெரிகிறது.

​அதிகாலை 4.30 மணியளவில் விமானம் அதன் நிறுத்துமிடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு இயல்பு நிலை திரும்பியது.

பிடிபட்ட பயணியிடம் விமான நிலையப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!