Latestஉலகம்சினிமா

41 வயதில் ADHD பாதிப்பு; ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த நடிகர் ஃபஹட் ஃபாசில்

கேரளா, மே-28 – ‘நடிப்பு அரக்கன்’ என தென்னிந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபல மலையாள நடிகர் ஃபஹட் ஃபாசில், சிறார்களுக்கு வரும் Attention Deficit Hyperactivity Disorder’ (ADHD) எனப்படும் கவனக் குறைபாடு, தனக்கு 41 வயதில் கண்டறியப்பட்டதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

41 வயதில் அப்பாதிப்பு ஏற்பட்டிருப்பதால், அது முழுமையாகக் குணமடையுமா என்ற கவலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

அதனை மருத்துவரிடம் கூறி தெளிவுப் பெற விரும்பிய ஃபஹட் ஃபாசிலுக்கு, சிறு வயது குழந்தைகள் என்றால் விரைவாக அவர்களை குணப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

கேரளாவில் குழந்தைகள் காப்பகமொன்றுக்குச் சென்றிந்த போது அவர் அத்தகவலைத் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு ADHD கண்டறியப்பட்டால் அதனை நிர்வகிப்பது சுலபம், ஆனால் பெரியவர்களால் அதனைக் கையாள்வது பெரும் சவால்.

என்றாலும், அந்த யதார்த்த உண்மையை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு தாம் வந்து விட்டதாக தனது அனுபவத்தை ஃபஹட் பகிர்ந்துக் கொண்டார்.

6 முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகளில் ஆறில் ஒருவருக்கு ADHD-யின் தாக்கம் இருப்பதாகக் மருத்துவ வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

இதனால் பாதிக்கப்படும் குழந்தைகளிடம் பயம், பதற்றம், அதிக இதயத் துடிப்பு, சோர்வு, தூக்கமின்மை, தூக்கக் கலக்கம், திடீர் திடீரென கோபம் கொள்வது போன்றவைக் காணப்படும்.

எனினும் இது ஒரு நோய் அல்ல, நரம்பியல் மாற்றம் மட்டுமே; உரிய ஆலோசனைகளாலும் வழிகாட்டிகளாலும் அதனைக் கட்டுப்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!