Latestமலேசியா

43 ஆண்டுகால சொத்துக்களை அறிவிப்பதில் சகோதரர்களிடையே தாமதம் -முக்ரிஸ் ஒப்புதல்

கோலாலம்பூர், ஏப் 3 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப , முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் குடும்ப உறுப்பினர்கள் 1981 ஆம் ஆண்டு முதல் அனைத்து சொத்து விவரங்களையும் சேகரித்து அறிவிப்பதில் சிரமமாக இருக்கும் என்று டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் தெரிவித்திருக்கிறார். அப்போதைய காலக்கட்டத்தில் இன்றைய தொழிற்நுட்ப வசதி மலேசியாவில் இல்லையென அவர் கூறினார். 1981 ஆம் ஆண்டிலிருந்து அனைத்து கோப்புக்களையும் கண்டறிவது எளிதான காரியம் அல்ல. எனினும் அவர்கள் இன்னமும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள் என டாக்டர் மகாதீரின் புதல்வரும் Pejuang கட்சியின் தலைவருமான Mukriz தெரிவித்தார்.

இப்போதைய அரசாங்கத்தை அவர்கள் கேட்டுக்கொண்டால்கூட 10 ஆண்டுகளுக்கு முன் உள்ள கோப்புகள் இருக்குமா என்று கேட்டால் இல்லையென்றுதான் விடை கிடைக்கும். பொதுவாக ஒரு கோப்புகள் ஏழு ஆண்டுகள் மட்டுமே வைக்கப்பட்டிருக்கும். அந்த காலக்கட்டத்தில் இப்போது இருப்பதுபோன்று Thumb drives வசதிகள் எதுவும் கிடையாது, அதற்கு பதிலாக,microfiche (மைக்ரோஃபிச் ) இருந்தது. இப்போது Google தேடு தளத்தில் எளிதாக கண்டுப்பிடிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!