Latestமலேசியா

5 லட்சம் ரிங்கிட் தொடர்பான விசாரணை அறிக்கை புக்கிட் அமான் சட்டப் பிரிவின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும்

ஷா அலாம், மே 15 – Damansara விலுள்ள  வர்த்தக வளாகத்தின்  கார் நிறுத்துமிடத்தில்  பணப் பெட்டியில் இருந்த    ஐந்து லட்சம் ரிங்கிட் ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கை  Bukit Aman  சட்டப் பிரிவின்  கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என சிலாங்கூர் போலீஸ் தலைவர்  டத்தோ Hussein  Omar Khan தெரிவித்தார்.  

அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு   Bukit Aman   சட்டப் பிரிவு  முடிவை எடுக்க முடியும் என அவர்  கூறினார்.  நாங்கள் விசாரணையை முடித்து விட்டோம்.   விசாரணை அறிக்கையை அரசாங்கத் தரப்பு வழங்கறிஞரான  DPPயிடம்  சமர்ப்பிப்பதற்கு  முன்  இதனை Bukit Aman சட்டப்  பிரிவு  கவனிக்க வேண்டும் என  விரும்புவதாக     Hussein   கூறினார். 

அந்த  5 லட்சம்  ரிங்கிட் பணத்தை ஒரு தனிப்பட்ட நபர் மட்டுமே உரிமை  கோரியுள்ளார்,  ஆனால்  இந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான  தெளிவான தகவலை  அந்த நபரினால்  தெரிவிக்க முடியவில்லை என  இன்று    சிலாங்கூர்  போலீஸ்  கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்ட பின்  Hussein தெரிவித்தார்.  

விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன் சட்ட பிரிவின் கவனத்திற்கு இந்த விவகாரத்தை கொண்டுச் செல்ல  முன்வந்ததற்கு இதுவே காரணம் என  அவர் கூறினார்.  அந்த பணம் தொடர்பில் உரிமை கொண்டாடுவதற்கு வெட்டுமர நிறுவன உரிமையாளர் மட்டுமே  முன்வந்துள்ளார்.  இதுவரை அவரிடமும்   இதர எண்மரிடமும்   விசாரணையின்போது வாக்குமூலம் பதிவு செய்துள்ளோம் என   Hussein   தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!