Latestமலேசியா

5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் உணவு விநியோகிப்பாளர் மரணம்

கோலாலம்பூர், செப் 24 – 5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் உணவு விநியோகிக்கும் ஆடவர் ஒருவர் உயரிழந்ததோடு மற்றொரு மோட்டார் சைக்கிளோட்டி கடுமையாயாக காயம் அடைந்தார். கிள்ளானில் ஜாலான் மேரு – ஜாலான் ஹாஜி சிராட்டில் சாலை சந்திப்பு சமிக்ஞை விளக்கு பகுதியில் நிகழ்ந்த அந்த விபத்தில் இரண்டு SUK Nisan x-trail வாகனங்கள், ஒரு புரோட்டோன் வீரா மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்டதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் S. Vijaya Rao தெரிவித்தார். சாலையின் இடது புறம் சென்று கொண்டிருந்த Nisan X-trail Suk வாகனம் திடீரென வலது புறம் வளைந்தபோது மற்றொரு வாகனத்துடன் மோதியதைத் தொடர்ந்து அவ்விரண்டு வாகனங்களும் கவிழ்ந்தன. Nisan X-trail Suk வாகனம் வலது புற பகுதியில் எதிரே வந்த Grabfood மோட்டார் சைக்கிளோட்டியை மோதியது. இதனால் கடுமையாக காயம் அடைந்த 34 வயதுடைய கிரேப் உணவு விநியோகிப்பாளர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்தார் என விஜய ராவ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!