Latestமலேசியா

5 வயது சிறுவன் வெட்டிக் கொலை: உறவினர் கைதாகி தீவிர விசாரணை

சிபூ, ஆகஸ்ட்-29,சரவாக், சிபூவில் 5 வயது சிறுவன் ஒருவன் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து, அவனது உறவினரான ஓர் ஆடவரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.

​வீட்டில் நிகழ்ந்த இந்தத் தாக்குதலில், கூரிய ஆயுதத்தால் பலத்த காயங்களுக்குள்ளான சிறுவன், சிபூ மருத்துவமனைக்குச் கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டது உறுதிச் செய்யப்பட்டது.

தகவல் கிடைத்து விரைந்து வந்த போலீஸார், 40 வயதிலான சந்தேக நபரைக் கைதுச் செய்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஆயுதத்தையும் பறிமுதல் செய்தனர்.

​இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக கொலைக் குற்றத்திற்கான குற்றவியல் சட்டத்தின் 302-ராவது பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவுச் செய்து, தாக்குதலுக்கான பின்னணி மற்றும் காரணத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!