Latestமலேசியா

51.7 மில்லியன் பயிற்சி மானியம் தவறாக பயன்படுத்தப்பட்டதா? ; மனிதவள அமைச்சர் மறுப்பு

கோலாலம்பூர், ஜூலை 10 – கெராக் இன்சான் கெமிலாங் (Gerak Insan Gemilang) பயிற்சி மானியத்தில், 51.7 மில்லியன் ரிங்கிட் தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் மறுத்துள்ளார்.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, HRD Corp தொடர்பான தேசிய தணிக்கை அறிக்கையில், அந்த முறைக்கேடு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், அந்த நிதி 315 பயிற்சி வழங்குநர்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு நிறுவனத்துக்காக ஒதுக்கப்படவில்லை என்பதை சிம் தெளிவுப்படுத்தினார்.

மீண்டும் மீண்டும் பங்கேற்ற மூவாயிரத்து 726 பங்கேற்பாளர்களை கொண்ட நிறுவனம் ஒன்றுக்கு, அந்த 51.7 மில்லியன் நிதி செலவிடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எனினும், அது உண்மையில்லை. 315 பயிற்சி வழங்குநர்கள் அந்த நிதியை பெற்றனர் என மக்களவையில் இன்று சிம் தெரிவித்தார்.

அதோடு, அந்த பயிற்சியில் பங்கேற்ற மூவாயிரத்து 726 பேரில், மூவாயிரத்து 132 அல்லது 84 விழுக்காட்டினர் மட்டும், ஒரு ஆண்டுக்குள் இரண்டு அல்லது மூன்று முறை பயிற்சியை திரும்ப திரும்ப மேற்கொண்டதாக சிம் சொன்னார்.

முன்னதாக, சில பயிற்சியாளர்கள் 16 முறை பயிற்சியை திரும்ப திரும்ப மேற்கொண்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக,
தேசிய தணிக்கை அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்களின் பதவியை பொருட்படுத்தாமல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமென, சிம் இன்று உத்தரவாதம் அளித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!