Latestமலேசியா

6 பெர்சாத்து MP-களின் நிலை குறித்து நோட்டீஸ் இன்னும் வரவில்லை; மக்களவை சபாநாயகர்

கியோத்தோ, ஜூன்-7 – பெர்சாத்து கட்சியில் இருந்து உறுப்பியம் நீக்கப்பட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கக் கோரும் அதிகாரப்பூர்வ நோட்டீஸ் எதனையும் தாம் இன்னும் பெறவில்லை என, மக்களவை சபாநாயகர் கூறியிருக்கிறார்.

வெளியில் என்ன சொல்லப்படுகிறது என்பது எனக்கு முக்கியமல்ல; அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் வந்த பிறகே அடுத்தக் கட்ட நடவடிக்கைக் குறித்து முடிவெடுக்கப்படும் என Tan Sri Johari Abdul சொன்னார்.

கட்சிகள் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது அவர்களின் உரிமை; அதே சமயம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுயேட்சைத் தன்மை மற்றும் உரிமையைக் காக்கும் கடமையும் சபாநாயகருக்கு இருக்கிறது.

எனவே எடுத்தோம் கவிழ்த்தோம் என என்றில்லாமல், இவ்விவகாரம் மிகவும் கவனமாகவும் நேர்த்தியாவும் ஆராய்ந்து முடிவெடுக்கப்பட வேண்டிய ஒன்று;

ஆகவே தமக்கு சற்று காவல் அவகாசம் தேவைப்படலாம் என அவர் கோடி காட்டினார்.

எதிர்கட்சியில் இருந்து கொண்டு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வாரின் தலைமைத்துவத்திற்கு ஆதரவுத் தெரிவித்த அந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும், திருத்தப்பட்ட பெர்சாத்து கட்சி விதிகளுக்கு ஏற்ப இயல்பாகவே உறுப்பியத்தை இழந்திருக்கின்றனர்.

எனவே, அவர்களின் நாடாளுமன்றத் தொகுதி காலியானதாக அறிவித்து, இடைத் தேர்தலுக்கு வழி விடுமாறு பெர்சாத்து கட்சி வலியுறுத்தி வருகிறது.

அது குறித்த நோட்டீஸ் சபாநாகருக்கு அனுப்பப்படும் என பெர்சாத்து சார்பில் கூறப்பட்ட நிலையில், தற்போது ஜப்பானில் இருக்கும் Tan Sri Johari அவ்வாறு கருத்துரைத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!