Latestமலேசியா

6 மாநிலங்களிலும் கோலாலம்பூரிலும் உள்ள பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பான 19 புகார்கள்

கோலாலம்பூர், நவ 22 – ஆறு மாநிலங்கள் மற்றும் கோலாலம்பூரில் உள்ள பள்ளிகளில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து 19 புகார்களை போலீசார் பெற்றனர், நாட்டிலுள்ள பல்வேறு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் வெறும் புரளியாகும் என போலீஸ் படைத் தலைவரான டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார். அரசாங்க பள்ளிகள், அனைத்துலக பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து மிரட்டல்கள் வந்ததாக அவர் கூறினார். சிலாங்கூரில் ஏழு புகார்களும், கோலாலம்பூரில் 5 புகார்களும் , ஜொகூரில் முன்று புகார்களும் , பினாங்கில் இரண்டு புகார்களும் ,பேரா மற்றும் நெகிரி செம்பிலானில் தலா ஒரு புகார்களையும் போலீஸ் பெற்றுள்ளதாக ரஸாருதீன் தெரிவித்தார். வெடிகுண்டு மிரட்டலை விடுப்பதற்கு பயன்படுத்திய நபர் இரண்டு மின்னஞ்சல்கள் புதிதாக உருவாக்கியிருப்பதாகவும் இதர இணைய சேவைகளால் அவை பயன்படுத்தப்படவில்லையென போலீஸ் விசாரணையின் மூலம் தெரியவருவதாக ரஸாருதீன் தெரிவித்தார்.

இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் ஆங்கிலத்திலிருந்து மலாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது . நவம்பர் 12 ஆம் தேதி ஜமைக்காவில் 70 பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட மின்னஞ்சலில் பயன்படுத்தப்பட்ட நிறுவனத்தின் சேவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனனர். வெடிகுண்டு மிரட்டலுக்கு உள்ளான பள்ளிகளில் போலீஸ் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அங்கு குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் எதுவும் இல்லையென்றும் தெரியவந்ததாக ரஸாருதீன் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!