Latestமலேசியா

600,000 ரிங்கிட் போலி பண கோரிக்கை பெர்லீஸ் மந்திரிபுசார் மகன் உட்பட அறுவர் தடுத்து வைப்பு

கங்கார், ஏப் 24 – 600,000 ரிங்கிட் போலி பணக் கோரிக்கை தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக பெர்லீஸ் மந்திரிபெசாரின்  மகன் உட்பட   அறுவரை  MACC  தடுத்து வைத்துள்ளது.  இன்று காலை  மணி 8.45 க்கு    அந்த சந்தேக நபர்கள் அனைவரும்   நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட பின் Majistret Ana Rozana Mohd Nor அவர்களை தடுத்துவைக்கும் உத்தரவை பிறப்பித்தார். 2022ஆம் ஆண்டு முதல்  பெர்லீஸ் மாநிலம் முழுவதிலும்  மேபாட்டு திட்டங்களை பழுதுபார்த்தது, பராமரிப்பு , சீரமைத்தது மற்றும்  பொருட்களை விநியோகித்தது  திட்டம் தொடர்பான  விசாரணைக்கு உதவ   27 முதல்  37 வயது வரைக்குமான சந்தேகப் பேர்வழிகள்  தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  

செய்யாத வேலைக்கும்  அவர்கள் போலியாக பணக் கோரிக்கை செய்துள்ளனர்.    தடுத்து வைக்கப்பட்ட சந்தேகப் பேர்வழிகளில் வர்த்தக  நிறுவனங்களின் உரிமையாளர்கள், குத்தகையாளர்கள்,   மாநில அரசாங்க செயலக மற்றும் மந்திரிபுசார்  அலுவலகத்தின்  ஊழியர்களும் அடங்குவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!