Latestமலேசியா

70 மில்லியன் ரிங்கிட் மோசடியா? Aman Palestin நிதி மையத்தில் எம்.ஏ.சி.சி அதிரடி சோதனை 41 வங்கிக் கணக்குகள் முடக்கம்

கோலாலம்பூர், நவ 23 – பாலஸ்தீனர்களுக்கான நிதியில் 70 மில்லியன் ரிங்கிட் மோசடி நிகழ்ந்துள்ளதாக கூறப்படுவது தொடர்பில் அமான் பாலஸ்தீன் (Aman Palestin) மையத்தில் இன்று காலை எம்.ஏ.சி.சி அதிரடி சோதனையை நடத்தியது. மேலும் 15.8 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட 41 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. நிதி மோசடி தொடர்பான இதர சில நிறுவனங்களுக்கு எதிராகவும் எம்.ஏ.சி.சி விசாரணையை மேற்கொண்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டு காலமாக செயல்படும் அமான் பாலஸ்தீன் மையத்திலிருந்து தனது நிதி மற்றும் அதன் நடவடிக்கை தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக அங்கு பரிசோதனை நடத்தப்பட்டன. பல முக்கிய சாட்சிகளிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

பாலஸ்தீன் இயக்கத்தின் நோக்கங்களுக்கு தொடர்பு இல்லாத நடவடிக்கைக்காக 70 மில்லியன் ரிங்கிட் முறைகேடு சம்பந்தப்பட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் எம்.ஏ.சிசியின் முன்னோடி விசாரணையில் அடையாளம் காணப்பட்டுள்ளது, எம்.ஏ.சி.சியின் 2009 ஆம் ஆண்டு சட்டம், சட்டவிரோத பண பரிமாற்ற சட்டம், அம்லா சட்டத்தின் பயங்கரவாத எதிர்ப்பு நிதி மற்றும் சட்டவிரோத நடவடிககைகள் மூலம் திரட்டப்பட்ட நிதிகள் தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக எம்.ஏ.சி.சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!