Latestஉலகம்

70 ஆண்டுகள் பழமையான காதல் கடிதம்; அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

அமெரிக்கா, பிப் 16 – அமெரிக்காவில் 70 ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ அதிகாரி ஒருவர் தனது காதலிக்கு எழுதிய காதல் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த ரிக் ட்ரோஜனோவ்ஸ்கி என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு பழைய கருவிப்பெட்டியை ஏலத்தில் வாங்கியுள்ளார்.

அந்த பெட்டியில்தான் அந்த 70 ஆண்டுகள் பழமையான காதல் கடிதம் இருப்பதை ரிக் தற்போது கண்டுபிடித்துள்ளார்.

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து வந்துள்ள அக்கடிதத்தில் ‘கடந்த கால சண்டைக்காக மன்னிப்பு கேட்கிறேன். விரைவில் வந்து உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே மேரி லீ கிரிப்ஸ் என்ற பெண்ணுக்கு இராணுவ அதிகாரி இர்வின் ஜி ஃப்ளெமிங் இந்த கடிதத்தை எழுதியதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து தற்போது இந்த கடிதத்தை உரியவரிடம் சேர்க்க ரிக் முயற்சித்து வருவதாக சமூக வளைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

தற்போது, வைரலாகும் அந்த காதல் கடிதம், ‘காலங்கள் தாண்டி காத்திருப்பேன்’ எனும் வாசகத்தை படம் பிடித்து காட்டுவதாக சமூக வலைத்தளவாசிகள் கருத்துகளை பதிவு செய்து வருகிறனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!