Latestமலேசியா

பினாங்கில் 6 துப்பாக்கிகளுடன் 4.6 மில்லியன் ரிங்கிட் போதைப் பொருள் பறிமுதல் ஆடவன் கைது

ஜோர்ஜ் டவுன், மே 27 – பினாங்கில் Sungai Ara வில் ஆடவன் ஒருவனை கைது செய்த போலீசார் 46 மில்லியன் ரிங்கிட் போதைப் பொருள் மற்றும் 100 தோட்டாக்களுடன் ஆறு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். 34 வயதுடைய அந்த சந்தேக நபர் வெள்ளிக்கிழமையன்று அவனது வீட்டில் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப் பொருள் விசாரணைத் துறையின் இயக்குநர் டத்தோ Khaw Kok Chin தெரிவித்தார். மறுநாளன்று Batu uban னில் உள்ள அடுக்ககத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது போதைப் பொருள் பறிமுதல் செய்ப்பட்டது. அந்த வீடும் அடுக்ககமும் போதைப்பொருள் பதனீடு மற்றும் கிடங்காக பயன்படுத்தப்பட்டு வந்ததாக அவர் கூறினார்.

மொத்தம் 118,02 கிலோ ஹரோய்ன், ஷாபு மற்றும் Caffine ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அந்த சந்தேக நபரின் வீட்டிலிருந்தஅலமாரியிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியும் தோட்டாக்களும் இதர குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Khaw Kok Chin கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!