பெட்டாலிங் ஜெயா, ஜூலை 29 – உடை எடை என்பது, அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களை, பதவி உயர்வு அல்லது சிறந்த சேவைக்கான விருதுகளுக்கு பரிசீலிக்க, தீயணைப்பு மீட்பு படையினரால் நிர்ணயிக்கப்பட்டுள்ள முக்கிய அளவுகோலாகும்.
BMI – சிறந்த உடல் நிறை குறியீடு, சேவை பதக்கங்களை வழங்குவதற்கான நிபந்தனைகளில் ஒன்றாகவும் கருதப்படுவதாக, தீயணைப்பு மீட்புத் துறை தலைமை இயக்குனர் நோர் ஹிஷாம் முஹமட் (Nor Hisham Mohammad) தெரிவித்தார்.
தீயணைப்பு மீட்புத் துறையில் பணிப்புரியும், ஒவ்வொரு அதிகாரியும், உறுப்பினரும் சிறந்த உடல் எடையைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதே அந்த அணுகுமுறையின் நோக்கமாகும் எனவும் நோர் ஹிஷாம் தெளிவுப்படுத்தினார்.
தீயணைப்பு மீட்புத் துறையில் பணிப்புரியும், மொத்தம் ஆயிரத்து 900 பேர் அல்லது 17 விழுக்காட்டினர் கூடுதல் உடல் எடையை கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
அதனால், அவர்களில் சிலர், உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனால், கூடுதல் உடல் எடையை கொண்டிருக்கும் அதிகாரிகளும், உறுப்பினர்களும், இரு மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட “வெல்னஸ் ஹப்” எனும் திட்டத்தின் கீழ் கண்காணிக்கப்பட்டு வருவதையும், நோர் ஹிஷாம் சுட்டிக்காட்டினார்.
நாடு முழுவதும் 26 இடங்களில் செயல்படுத்தப்படும் “வெல்னஸ் ஹப்” சுகாதார திட்டம், நேர்மறையான பலனை கொண்டு வந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.