Latestமலேசியா

போலி கல்விச் சான்றிதழ்கள் விற்பனை தொடர்பாக உயர்க்கல்வி அமைச்சகம் காவல்துறையில் புகாரளிக்கும் – ஜம்ரி அப்துல் காடீர்

புத்ராஜெயா, ஆகஸ்ட் 1 – பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை போலி கல்விச் சான்றிதழ்கள் விற்பனை செய்யப்படுவதை குறித்து உயர்க்கல்வி அமைச்சகம் காவல்துறையில் புகார் அளிக்கும் என்று உயர்க்கல்வி அமைச்சர் ஜம்ரி அப்துல் காடீர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் இது போன்ற செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும் என்று ஜம்ரி நினைவூட்டினார். இதுபோன்ற செயல்கள் உயர்க்கல்விக் கூடத்தின் மதிப்பைக் குறைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வேலை வாய்ப்பைப் பெறுவதற்காக, கல்வித் தகுதிக்கு ஆசைப்படுபவர்களைக் குறிவைத்துப் போலி சான்றிதழ்கள் 1,500 ரிங்கிட் முதல் 4000 ரிங்கிட் வரை இணையத்தளத்தில் வெளிப்படையாக விற்கப்படுவதை முன்னதாக செய்தி ஊடகங்கள் வெளியிட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, உயர்க்கல்வி நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்தி ஏமாற்றப்பட்டவர்கள் அளித்த புகார்கள் மூலம், பல கல்விச் சான்றிதழ் மோசடி வழக்குகள் வெற்றிகரமாக அவிழ்க்கப்பட்டதையும் ஜாம்ப்ரி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!