Latestமலேசியா

பருவநிலை மாற்றத்தால் ஏற்படப் போகும் புலம்பெயர்வுக்கு உலகம் தயாராக வேண்டும்; எச்சரிக்கிறார் முன்னாள் MP. கஸ்தூரி

ஜியோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-4, பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் பேரளவிலான புலம்பெயர்வுக்கு உலகம் தயாராக வேண்டுமென்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு.

புலம்பெயர்வுகள் இனி உள்நாட்டுப் போர், பஞ்சம், பொருளாதாரச் சவால்கள் போன்றவற்றால் மட்டும் ஏற்படப் போவதில்லை.

எனவே இந்த ‘கட்டாய’ புலம்பெயர்வு குறித்த சிந்தனை மாற்றம் அவசியம் என அந்த பினாங்கு பத்து காவான் முன்னாள் MP சொன்னார்.

உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தின் ஒரு பகுதியாக பூமி வெப்பமடைந்து வருகிறது; இதனால் கடல் மட்டம் உயர்ந்து 2050-ஆம் ஆண்டுக்குள் மலேசியாவின் கரையோரப் பகுதிகள் நீருக்கடியில் இருக்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கட்டாயக் குடியேற்றம் என்றால் என்ன என்பதை அரசாங்கம் மறுவரையறை செய்ய வேண்டும் என கஸ்தூரி கேட்டுக் கொண்டார்.

இடம்பெயர்வு, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான பிரச்சினைகள் குறித்த பொது அக்கறையின்மையை நீக்குவதன் மூலம் இது தொடங்குகிறது என்றார் அவர்.

மலேசியர்கள், அக்கறையின்மையைக் கைவிடவேண்டும்; தத்தெடுக்கப்பட்ட நாட்டில் புலம்பெயர்ந்தோர் துஷ்பிரயோகம் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கஸ்தூரி வலியுறுத்தினார்.

வீட்டுப் பணிப்பெண்களை துஷ்பிரயோகம் செய்வது, மனித கடத்தல் கொடுமை ஆகியவை அதிலடங்கும்.

பினாங்கு,  ஜியோர்ஜ்டவுனில் அண்மையில் நடைபெற்ற மூத்த  பத்திரிகையாளர் அருள்தாஸ் சின்னப்பனின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய போது கஸ்தூரி அவ்வாறு சொன்னார்.

வாங் கெலியான் பிணக்குழி சம்பவத்தை மையமாக வைத்து “Mass Graves: Uncovering the Killing Fields of Wang Kelian” என்ற பெயரில் அந்நூல் எழுதி வெளியிடப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!