தாயின் பாதங்களை கழுவிய தண்ணீரை குடித்தேன் -ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்தோனேசிய எடை தூக்கும் வீரர் நெகிழ்ச்சி
பாரிஸ், ஆக 11 – ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தோனேசிய பளுதூக்கும் வீரர் என்ற வரலாற்றை ஏற்படுத்தியிருக்கும் ரிஸ்கி ஜூனியன்ஸ்யா, ( Rizki Juniansyah ) போட்டிக்கு முன் ரிஸ்கி (Rezeki) தனது தாயின் கால்களைக் கழுவி, பின்னர் அந்த நீரை அருந்திய சடங்குதான் இந்த சாதனைக்கு உண்மையில் உதவியது என நெகிழ்ச்சியுடன் கூறினார். அவர் 199 கிலோ எடையுடன் ‘க்ளீன் அண்ட் ஜெர்க்’ (Clean and Jerk) என்ற ஒலிம்பிக் சாதனையையும் ஏற்படுத்தியுள்ளார். அவர் 73 கிலோ பிரிவில் 155 கிலோ ‘ஸ்னாட்ச்’ (Snatch) மற்றும் 199 கிலோ ‘கிளீன் அண்ட் ஜெர்க் (Clean and Jerk) உட்பட 354 கிலோ எடையைத் தூக்கினார்.
தாய்லாந்தில் 2024 ஐ.டபிள்யூ.எஃப் (IWF) உலகக் கிண்ண போட்டியில் கலந்துகொண்டபோதும் தனது தாயின் கால்களை கழுவிய நீரை அருந்தியதாகவும் அப்போதும் தாம் வெற்றி பெற அந்த சடங்கு உதவியதாக அவர் ஒப்புக்கொண்டார். நான் எந்த ஒரு போட்டியில் பங்கேற்பதற்கு முன் என் அம்மாவின் கை, கால்களை தண்ணீரில் கழுவி, அந்நீரை குடிப்பேன்.
ஒவ்வொரு முறையும் நான் என் தாயின் கால்களை முத்தமிட்டு, என் தாயின் கால்களைக் கழுவி, தண்ணீரைக் குடிக்கும்போது, நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என்று அவர் marketeers.com இணையத்தள பதிவேட்டிடம் தெரிவித்தார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ரிஸ்கி கலந்துகொள்வதை பார்ப்பதற்கு முன்னாள் எடைதூக்கும் வீராங்கனையான அவரது தாயார் Yeni Rohaeni- யும் வந்திருந்தார்.