புக்கிட் காயு ஹீத்தாம், ஆகஸ்ட் -20, பெர்லிஸ், புக்கிட் காயு ஹீத்தாமில் கொள்கலன் லாரி கட்டுப்பாட்டை இழந்து வீட்டொன்றை மோதியதில், வீட்டிலிருந்த பெண் காயங்களின்றி உயிர் தப்பினார்.
தாமான் பாயான் எமாசில் (Taman Bayan Emas) 37 வயது ஷாஃபிகா ஷாஃபியி (Shafiqa Shafie) வீட்டில் தனியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
திடீரென லாரி பிரேக் போடும் பெரும் சத்தம் கேட்டு, அறைக் கண்ணாடி வழியாக எட்டிப் பார்த்த ஷாஃபிகா, கொள்கலன் லாரி, வீட்டின் தாழ்வாரத்தை (porch) மோதியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உயிருக்கு அஞ்சி உடனடியாக சமையலறைப் பக்கமாக ஓடியவர், லாரி முழுவதுமாக நின்ற பிறகு வெளியில் வந்து அண்டை வீட்டாரிடம் உதவிக் கோரினார்.
கொள்கலன் லாரி மோதியதால் உடைந்த சிலிங் பாகங்கள் படுக்கையறையில் வந்து விழுந்தன; விரைந்து செயல்பட்டதால் அவை என் மேல் விழாமல் தப்பித்தேன் என்றார் அவர்.
அச்சம்பவத்தில் வீட்டின் முன்பகுதி உடைந்து விழுந்து, 2 கார்களோடு, 1 மோட்டார் சைக்கிளும் சேதமுற்றது.
இவ்வேளையில் லாரி ஓட்டுநருக்கு அதில் சிராய்ப்புக் காயமேற்றப்பட்டது.
சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டு, போலீஸ் விசாரணைக்காக அவர் கொண்டுச் செல்லப்பட்டார்.