Latestமலேசியா

RM100 புத்தகப் பற்றுச் சீட்டை ஏராளமான மாணவர்கள் இன்னும் பயன்படுத்தவில்லை; கடைசி நாள் டிசம்பர் 31

மஞ்சோங், நவம்பர்-24, நாட்டிலுள்ள 1 மில்லியனுக்கும் மேற்பட்ட உயர் கல்விக் கூட மாணவர்களில் இதுவரை 235,000 பேர் மட்டுமே, 100 ரிங்கிட் புத்தகப் பற்றுச் சீட்டை பயன்படுத்தியுள்ளனர்.

இது மிக மிகக் குறைந்த எண்ணிக்கை என உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாம்ரி அப்துல் காடிர் (Datuk Seri Zambry Abdul Kadir) ஏமாற்றம் தெரிவித்தார்.

இன்னும் பற்றுச் சீட்டைப் பயன்படுத்தாமலிருக்கும் மாணவர்கள், டிசம்பர் 31-ல் அது காலாவதியாகும் முன்னரே அவ்வாறு செய்திட வேண்டும்.

ஒன்றரை மாத கால அவகாசமே அவர்களுக்கு எஞ்சியிருப்பதை அமைச்சர் நினைவுறுத்தினார்.

மாணவர்களின் வசதிக்காக அரசாங்கம் வழங்கிய வாய்ப்பை அவர்கள் வீணாக்குவது துரதிஷ்டம் என்றார் அவர்.

மே மாதம் கோலாலம்பூர் அனைத்துலகப் புத்தக விழாவைத் தொடக்கி வைத்த பிரதர், அரசு மற்றும் தனியார் உயர் கல்விக் கூட மாணவர்களுக்கு 100 ரிங்கிட் புத்தகப் பற்றுச் சீட்டு உதவியை அறிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!