கோலாலம்பூர், நவம்பர்-29, கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் உள்ள இரவு நேர கேளிக்கை மையமொன்றில் போலீஸ் மேற்கொண்ட Ops Khas Hiburan சோதனையில், போதைப்பொருள் உட்கொண்ட 60 பேர் கைதாகினர்.
புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு அச்சோதனையை மேற்கொண்டது.
மொத்தமாக 181 பேரை சோதனையிட்டதில், 20 முதல் 42 வயதிலான 60 பேர் போதைப்பொருள் உட்கொண்டது உறுதியானது.
அவர்களில் நால்வர் வெளிநாட்டவர்கள்.
சுமார் 400 கிராம் எடையில் கெத்தாமின், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றின் மதிப்பு 63,000 ரிங்கிட்டுக்கும் மேல் எனக் கூறப்படுகிறது.
இவ்வேளையில் சம்பந்தப்பட்ட கேளிக்கை மையம் முறையான உரிமம் வைத்திருப்பது உறுதிச் செய்யப்பட்டது.