
கோலாலம்பூர், மே 16- மலேசியப் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டின், முதல் காலாண்டில் 4.4 விழுக்காடு வளர்ச்சியடைந்திருந்தாலும், 2024 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் அதன் விழுக்காடு சற்று குறைவாகவே உள்ளது.
இவ்வளர்ச்சியில் சேவைத் துறை 5 சதவீதம், உற்பத்தித் துறை 4.1 சதவீதம், விவசாயத்துறை 0.6 சதவீதம் மற்றும் கட்டுமானத்துறை 14.2 சதவீத பங்கையும் வழங்கியுள்ளன என்று பேங்க் நெகாரா (BNM) ஆளுநர் அப்துல் ரஷீத் கஃபோர் கூறியுள்ளார்.
மேலும் உள்நாட்டு தேவை வளர்ச்சி மீள்தன்மையுடன் இருந்தபோதிலும், உலகளாவிய வர்த்தகக் கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்களால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உலகளாவிய வர்த்தக மாற்றத்தை ஆய்வு செய்து எதிர்காலத்தில் ஒரு புதிய பொருளாதார வளர்ச்சி கணிப்பினை வெளிப்படுத்த இருப்பதாக அறியப்படுகின்றது.