
ஜோர்ஜ்டவுன் – ஆகஸ்ட்-5 – அரசாங்க மருத்துவமனைகளில் Help Desk எனும் உதவிக் கோருவோர் முகப்பு அமைக்கப்பட வேண்டும் என பினாங்கு இந்து இயக்கம் பரிந்துரைத்துள்ளது.
மருத்துவமனைகளுக்கு வரும் வயதானவர்களும் மாற்றுத் திறனாளிகளும் எந்தெந்த இடம் எங்கிருக்கின்றது என்பதை கண்டறிவதில் தடுமாறுகின்றனர்.
எனவே, அவர்களின் தவிப்பைக் கருத்தில் கொண்டு அரசாங்க மருத்துவமனைகளில் இந்த Help Desk முகப்புகளை அமைக்க, சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அவ்வியக்கத்தின் தலைவர் டத்தோ பி.முருகையா கேட்டுக் கொண்டுள்ளார்.
Help Desk என்பது வாடிக்கையாளர்கள் அல்லது பயனாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், கேள்விகளுக்கு பதில் அளிக்கவும், தொழில்நுட்ப ஆதரவு வழங்கவும் ஒரு நிறுவனத்தால் அமைக்கப்படும் மையமாகும்.
இந்த நடவடிக்கை அமல்படுத்தபடுமாயின், நிச்சயமாக சமந்தப்பப்பட்டவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.