Latestமலேசியா

புத்தாண்டு ‘பரிசு’; பொது இடங்களில் குப்பை வீசிய 42 பேருக்கு நோட்டீஸ்

கோலாலம்பூர், ஜனவரி-2 – புத்தாண்டின் முதல் நாளில் நடத்தப்பட்ட ‘Ops Cegah Ambang Tahun Baharu 2026’ நடவடிக்கையில், பொது இடங்களில் குப்பை வீசியக் குற்றத்திக்காக 42 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்நடவடிக்கை, ஜனவரி 1 நள்ளிரவு 12.01 மணிக்கு தொடங்கி, ‘சட்டம் 672’ கீழ் 11 முக்கிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டதாக, SWCorp எனப்படும் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுத் தூய்மைக் கழகம் கூறியது.

அந்த 42 பேரில் 24 பேர் மலேசியர்கள், 18 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர்;

வயது வாரியாகப் பார்த்தால், 40 பேர் பெரியவர்கள், 2 பேர் சிறுவர்கள்.

கண்ட கண்ட இடங்களில் அவர்கள் வீசியக் குப்பைகளில் சிகரெட் துண்டுகள், பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், டின்கள், டிஷூ மற்றும் உணவு மூடிகளும் அடங்கும்.

நோட்டீஸ் பெற்றவர்கள் மீது விசாரணை நடைபெறும்;

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக RM2,000 அபராதம் அல்லது சமூக சேவை தண்டனை விதிக்கப்படலாம்.

இதுபோல் பொது இடங்களில் குப்பை வீசுபவர்களைக் கண்டால், பொது மக்கள் WhatsApp Aduan: 013-210 7472 எற்ற எண்கள் மூலம் புகார் அளிக்குமாறு SWCorp, கேட்டுக் கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!