Latestமலேசியா

Visit Malaysia 2026: சுற்றுலாப் பயணிகளிடம் நட்பான அணுகுமுறை அவசியம் – அமைச்சர்

Visit Malaysia 2026: சுற்றுலாப் பயணிகளிடம் நட்பான அணுகுமுறை அவசியம் – அமைச்சர்

கோலாலம்பூர், பிப்ரவரி 11 –

Visit Malaysia 2026 (VM2026) இயக்கத்தின் முதல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளிடம் நட்பற்ற அணுகுமுறை குறித்த புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் Datuk Seri Tiong King Sing, மலேசியர்கள் அனைவரும் மேலும் அன்பும் மரியாதையும் காட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.

தள ஆய்வுகளில் சில உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகள் வரவேற்பு குறைவாக இருப்பதாக அதிருப்தி தெரிவித்ததாக அவர் கூறினார். சந்தைகள், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கு வெளிநாட்டு பயணிகள் வழி கேட்டபோது, பொதுமக்கள் மற்றும் சில அரசு ஊழியர்கள் கடுமையாக பேசியதாகவும், சில பேருந்து ஓட்டுநர்கள் இலக்கு குறித்து கேட்டவர்களை திட்டியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன என்றார்.

KL Sentral-இல் Mesra Malaysia Campaign தொடக்க நிகழ்வில் பேசிய அவர், நாட்டின் நல்லபெயரை காக்க அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். சில அதிகாரிகள் கடுமையாக நடந்துகொண்டதாக கூறப்படும் புகார்களைத் தீர்க்க துறைத் தலைவர்கள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சீனப் புத்தாண்டுக்குப் பிறகு வணிக வளாக நிர்வாகங்களுடனும் ஆலோசனை நடத்தப்படும் என்றும் கூறினார்.

ஜனவரி 6ஆம் தேதி பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தொடங்கிய VM2026 திட்டம், 47 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு மலேசியாவை உலகத் தரத்திலான சுற்றுலா மையமாக உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!