Latestமலேசியா

ஆலய விவகாரங்களுக்கு தீர்வுக்கான பிரதமரிடம் மனு தாக்கல்; பேராக் இந்து சங்கம் திட்டம்

ஆலய விவகாரங்களுக்கு தீர்வுக்கான பிரதமரிடம் மனு தாக்கல்; பேராக் இந்து சங்கம் திட்டம்

கோலாலம்பூர், பிப்ரவரி-11,

– அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள இந்து ஆலயங்கள் எதிர் நோக்கும் நில விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள சிக்கலுக்கு தீர்வுக்கான பேராக் இந்து சங்கம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரிடம் மனு தாக்கல் செய்யவுள்ளது.

இம்மாதம் 14 ஆம் தேதி பேராக், தம்புன் நாடாளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் பொங்கல் விழாவில் கலத்துக்கொள்ளவிருக்கும் தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரதமரிடம் இந்த மகஜர் வழங்கப்படும் என்று பேராக் மாநில இந்து சங்கத் தலைவர் சந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிலங்களில் பல ஆண்டுகள் செயல்பட்டு வரும் ஆலயங்கள் எதிர்நோக்கி வரும் நிலப் பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான பல ஆலயங்கள் விண்ணப்பங்கள் செய்தும் நில அலுவலகத்திலிருந்து முறையான பதில் கிடைப்பதில்லை என்ற புகார்களை ஆலய பொறுப்பாளர்கள் முன் வைத்துள்ளனர்.

இந்தப் பிரச்சனையை தம்புன் நாடாளுமன்றத் தொகுதியிலும் உள்ள ஆலயங்கள் எதிர்நோக்குவதாக , தஞ்சோங் ரம்புத்தான் இந்து சங்க அலுவலகத்தில் தம்புன் வட்டாரத்தில் உள்ள ஆலய பொறுப்பாளர்களுடன் நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

பேரா மாநிலத்தில் அரசு நிலங்களில் கட்டபட்டுள்ள ஆலயங்கள் இடத்தை காலி செய்ய நோட்டீஸ் பெற்ற மேலும் ஆலயங்கள் இருந்தால் அந்த வட்டாரத்தில் உள்ள இந்து சங்க பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்குமாறு சந்திரன் கேட்டுக்கொண்டார்.

பேரா மாநிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முறையான ஆவணங்கள் வைத்திருக்கவேண்டும் என்றும் சந்திரன் வலியுறுத்தினார்.

அதே சமயம், பேரா மாநிலத்தில் அரசாங்க அறுமதியின்றி கட்டப்பட்ட பல ஆலயங்களுக்கு தீர்வுக்கான பேராக் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் நடவடிக்கையை எடுத்து வரும் தகவலையும் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!