
திருமணத்திற்கு அழைக்கப்பட்ட தேடும் குற்றவாளிகள்: ராஜஸ்தான் போலீஸ் கான்ஸ்டபிள் பணி நீக்கம்
ஜெய்ப்பூர், பிப்ரவரி-16,
இந்தியா, ராஜஸ்தானில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் திருமண வீடியோ வைரலானதால், அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அசோக் பிஷ்னோயின் திருமணத்தில், ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேசத்தில் தேடப்பட்ட குற்றவாளிகள் பலர் கலந்து கொண்டதே அதற்குக் காரணம்.
வீடியோவில், அந்த குற்றவாளிகள் சகஜமாகத் தோன்றி, பணத்தை வீசி, மணமகனுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதும், போலீஸார் விசாரணை நடத்தினர்.
முக்கியப் புள்ளிகள் உட்பட குறைந்தது 8 குற்றவாளிகள் விழாவில் இருந்தது உறுதிச் செய்யப்பட்டது.
இதையடுத்து திருமணமான இரண்டே நாட்களில் பிஷ்னோய் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருப்பது, போலீஸ் அதிகாரிக்கு ஏற்றதல்ல என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



