Latestமலேசியா

KPDN ‘Ops Pantau’ தொடக்கம்: ரமலான், ஹரிராயா காலத்தில் விலை கண்காணிப்பு தீவிரம்

கோலாலம்பூர், பிப்ரவரி-22-ரமலான் நோன்பு மாதம் மற்றும் ஹரிராயா பெருநாளை முன்னிட்டு அதிகப்படியான விலையேற்றத்தைத் தடுக்கவும், பொருள் கையிருப்புப் பற்றாக்குறையைத் தடுக்கவும், உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN, நாடு முழுவதும் ‘Ops Pantau’ சோதனை நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

பிப்ரவரி 19-ஆம் தேதி தொடங்கிய இந்நடவடிக்கை, கோழி, முட்டை, சமையல் எண்ணெய், சீனி மற்றும் மாவு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கண்காணிப்பதில் கவனம் செலுத்தும்.

தவிர, சூப்பர் மார்க்கெட், ரமலான் சந்தைகள், இரவுச் சந்தைகள் மற்றும் சில்லறை கடைகளிலும் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்துவர்.

வியாபாரிகள் விலை கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதிச் செய்வதுடன், அநியாயமாக விலைகளை உயர்த்தும் நபர்களுக்கு எதிராக இச்சோதனையின் போது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இது, விழாக் காலங்களில் பொது மக்கள் நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்களை பெறுவதை உறுதிச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக KPDN கூறிற்று.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!