Latestமலேசியா

சிரம்பான் – போர்ட் டிக்சன் நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள் மோதல்; 5 வயது சிறுமி உயிரிழப்பு

போர்டிக்சன், பிப்ரவரி-23-சிரம்பான்–போர்டிக்சன் நெடுஞ்சாலையில் நேற்று மாலை 3 வாகனங்கள் மோதிய விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்தாள்.

மாலை 6.54 மணிக்கு நிகழ்ந்த இவ்விபத்தில் PLUS அவசர உதவி லாரி, PLUS ரோந்து 4WD வாகனம் மற்றும் Honda CR V கார் மோதிக்கொண்டன.

மழை பெய்துகொண்டிருந்த நிலையில் Honda CR-V கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அப்போது அந்த PLUS லாரியும், ரோந்து வாகனமும், ஏற்கனவே தடம் புரண்ட வாகனமொன்றுவதற்கு உதவுவதற்காக அவசரப் பாதையில் இருந்தன.

அச்சிறுமி Honda CR V வாகனத்தின் முன் பயணி இருக்கையில் அமர்ந்திருந்தார்.

தலையில் கடுமையான காயம் அடைந்து, UCSI மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது சிறுமி இறந்ததாக போலீஸ் தெரிவித்தது.

குழந்தையின் பெற்றோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!