Latestஇந்தியா

டெல்லியில் 19 வயது மாணவியின் அந்தரங்க பகுதியில் ‘sanitizer’-ஐ ஊற்றி எரிக்க முயன்ற ஆடவன் கைது

டெல்லி, பிப்ரவரி 23 – டெல்லி திரிபுராவைச் சேர்ந்த 19 வயது பல்கலைக்கழக மாணவி, திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்து வரும் (living together) ஆடவனால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளி, ‘sanitizer’-ஐ ஊற்றி அப்பெண்ணின் அந்தரங்க பகுதியை எரிக்க முயன்றதோடு அவரைப் பாட்டிலால் அடித்து கடுமையாக காயப்படுத்தியிருக்கின்றான்.

மேலும் கத்தியால் பெண்ணின் கால்களை வெட்டி மிரட்டியுமுள்ளான்.

இதனிடையே தாக்குதலின் போது பதிவு செய்யப்பட்ட காணொளியை முன் வைத்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

போலீசார், மருத்துவ சான்றுகள் மற்றும் குற்றவாளி எடுத்த வீடியோக்களைச் சேகரித்து விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!