Latestமலேசியா

2022 ஆம் ஆண்டு முதல் கைவிடப்பட்ட 175 குழந்தைகளை சமூக நலத்துறை காப்பாற்றியுள்ளது

2022 ஆம் ஆண்டு முதல் கைவிடப்பட்ட 175 குழந்தைகளை சமூக நலத்துறை
காப்பாற்றியுள்ளது

கோலாலம்பூர். பிப் 24 –

2022 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டுவரை 12 மாதங்கள் மற்றும் அதற்குக் குறைவான வயதுடையதாகக் கருதப்படும் மொத்தம் 175 குழந்தைகளை சமூகநலத்துறை மீட்டதோடு அவர்களுக்குப் பாதுகாப்பையும் அளித்துள்ளது.

2001 ஆம் ஆண்டின் சிறார் சட்டம் (சட்டம் 611) , கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் குழந்தைகள் வழக்குகள் 17 (1) பிரிவின் கீழ் சமூக நலத்துறையால் மீட்கப்பட்ட குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளாக வகைப்படுத்தப்பட்டதாக பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு இன்று மக்களவையில் தெரிவித்தது. கைவிடப்பட்ட, அல்லது அவர்களின் பாதுகாவலர்களால் சரியான பராமரிப்பு வழங்கப்படாத குழந்தைகளும் இவற்றில் அடங்கும்.

கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பை வழங்குவது சமூக நலத்துறையின் பொறுப்பாகும்.அதோடு இந்த விவகாரங்கள் தொடர்பான விசாரணையை நடத்தும் பொறுப்பு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே உடல், மனநிலை மற்றும் சமூக பிரச்சனைக்கு உள்ளான பதின்ம வயதினர்களுக்கு உதவுவதற்காக ஆலோசனை மற்றும் சுகாதார சேவைகளை வழங்கும் CafeTEEN இளைஞர் மையத்தையும் பெண்கள்,குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!