
சபா பெனாம்பாங்கில் ரி.ம1.28 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல்
சபா Penampang மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்ககத்தின் கீழ் தளத்தில் போலீசார் நேற்று மேற்கொண்ட அதிரடி சோதனையில் 1.28 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 25.74 கிலோ ஷாபு (syabu) போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
மாவட்ட போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நான்கு நபர்களைச் பரிசோதித்தன் விளைவாக அந்த போதைப் பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக Penampang மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Sammy Newton தெரிவித்தார்.
மேலும் methamphetamine என சந்தேகிக்கப்படும் படிகத் துண்டுகளைக் கொண்ட 24 வெளிப்படையான பிளாஸ்டிக் பாக்கெட்டுகளையும் போலீசார் கைப்பற்றினர்.
இந்த விவகாரம் 1952 ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் 39B பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்ட இதர சந்தேகப் பேர்வழிகளை கைது செய்வதற்கான விசாரணையும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் Sammy Newton குறிப்பிட்டார்.



