
தும்பாட், பிப்ரவரி 25-மண் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் Bucket எனப்படும் கிரேனின் துளையிடும் பகுதி மோதியதால் கட்டுமான தொழிலாளி ஒருவர் மரணம் அடைந்தார்.
இந்த பரிதாப சம்பவம் நேற்று பிற்பகல் மணி 1.40 அளவில்,பெங்காலான் குபோர் , Pantai Genting சாலையில் நிகழ்ந்தது. உடலின் உள் உறுப்புக்களில் ஏற்பட்ட காயத்தினால் 31 வயதுடைய அந்த தொழிலாளி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே இறந்தார் .
சாலையோரத்தில் வடிகால் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக தும்பாட் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமட் கைரி ஷாபி தெரிவித்தார்.
சக ஊழியரால் இயக்கப்பட்ட கிரேன் சறுக்கியதைத் தொடர்ந்து அது அந்த தொழிலாளரை மோதியதாக நம்பப்படுகிறது.



