
கோலாலம்பூர், பிப்ரவரி-27-நாட்டில் குழந்தைகள் மீதான துன்புறுத்தல் சம்பவங்கள் இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளன.
கடந்தாண்டின் நான்காவது காலாண்டில், மாதத்திற்கு சராசரியாக 525 குழந்தை சித்ரவதை சம்பவங்கள் சமூக நலத் துறையான JKM-மால் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
அக்டோபர் முதல் டிசம்பர் வரை மொத்தமாக 1,575 சம்பவங்கள் பதிவாகின.இதில் உடல், பாலியல் மற்றும் உணர்ச்சி துன்புறுத்தல்களும் அடங்கும் என, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நேன்சி ஷுக்ரி மக்களவையில் தெரிவித்தார்.
தடுப்பு நடவடிக்கையாக, அமைச்சு துன்புறுத்தல் நடைபெறும் ஆபத்துள்ள குடும்பங்களுக்கு ஆலோசனை, திருமண வழிகாட்டல், பெற்றோர் கல்வி மற்றும் மனநல ஆதரவு வழங்குகிறது.
தவிர, குழந்தைகள் பாதுகாப்பு துறை உருவாக்கப்பட்டு, சமூக மட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
குழந்தைகளை பாதுகாப்பதில் அனைவரின் பங்களிப்பும் அவசியம்; சமூகத்தின் ஒத்துழைப்பே குழந்தைகளின் நலனுக்கான முக்கிய அடிப்படை என அமைச்சர் வலியுறுத்தினார்.



