Latestஉலகம்

ஈரான் பெரும் பதிலடி தாக்குதல்: அதிரும் வளைகுடா வட்டாரம்

தெஹ்ரான், மார்ச்-2-அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் பெரும் பதிலடி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக உச்சத் தலைவர் ஆயதொலா அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, அதன் சீற்றம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

அலை அலையாக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பாய்ந்து, வளைகுடாவில் அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் கட்டமைப்புகள் தாக்கப்பட்டு வருகின்றன.

இதில் ஐக்கிய அரபு சிற்றரசின் வர்த்தக நகரமான துபாய் மீதே அதிகம் குறி வைக்கப்பட்டு வருகிறது.

அமைதிப் பூங்காவாகவும், முதலீட்டாளர்களுக்கு உகந்த இடமாகவும் திகழ்வதாகக் கூறப்படும் துபாயின் அந்த அந்தஸ்தை தகர்ப்பதே ஈரானின் நோக்கமாகும்.

அவ்வகையில், துபாய் அனைத்துலக விமான நிலையம் சேதமடைந்து, விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன.

Burj Al Arab, Palm Jumeirah உள்ளிட்ட முக்கிய இடங்களும் சேதமடைந்தன.

Jebel Ali துறைமுகத்தில் தீப்பற்றியதில் குறைந்தது மூவர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பொருளாதார தாக்கமாக,1,800க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

Hormuz நீரிணையை மூடுவதாக ஈரான் எச்சரித்ததால், கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி விநியோகமும் பெரும் ஆபத்தில் உள்ளது.

வளைகுடா நாடுகள் அமைதியை வலியுறுத்தினாலும், தாக்குதலுக்கு இஸ்ரேல் தொடர்ந்து பொது மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறது.

ஐ.நா. பாதுகாப்பு மன்றமும் தீர்வைத் தேடி அவசர ஆலோசனைகளை நடத்தி வந்தாலும் வட்டார போர் விரிவடையும் அச்சம் அதிகரித்துள்ளது…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!