Latestமலேசியா

அஸ்டோன் மார்டின், மெசராட்டி உட்பட RM4.45 மில்லியன் மதிப்புள்ள கடத்தப்பட்ட 14 கார்கள் பறிமுதல்

கோத்தா பாரு, மார்ச் 2- கிளந்தான் சுங்கத் துறை , சுங்க வரி உட்பட RM4.45 மில்லியன் மதிப்புள்ள கடத்தப்பட்ட ஆடம்பர வாகனங்களை விநியோகிக்கும் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

பிப்ரவரி 2 முதல் 10 வரை மேற்கொள்ளப்பட்ட நடடிக்கையில் ஆறு உயர் சக்தி கொண்ட மோட்டார் சைக்கிள்கள் உட்பட 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கிளந்தான் மாநில சுங்கத்துறையின் இயக்குநரும், உள்நாடு வரிப் பிரிவின் துணை இயக்குநருமான இஷாக் இஸ்மாயில் தெரிவித்தார்.

கோலாலம்பூர் மற்றும் ஜோகூர் பாருவைச் சுற்றி சோதனைகள் நடத்தப்பட்டதாக அவர் கூறினார். இந்த நடவடிக்கையின் விளைவாக, சிங்கப்பூரிலிருந்து விடுவிக்கப்படாததாக சந்தேகிக்கப்படும் 14 வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களும் தடுத்துவைக்கப்பட்டன.

அவற்றில் ஆஸ்டன் மார்ட்டின், ஜாகுவார் XJ, மெர்சிடிஸ் பென்ஸ் A180, மசெராட்டி, டொயோட்டா GT 86, Triumph டேடோனா 675R மோட்டார் சைக்கிள், கவாசாகி KTM மற்றும் கவாசாகி KLX-DRZ 110 ஆகியவையும் அடங்கும்.

பறிமுதல் செய்யப்பட்ட இந்த வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் மொத்த மதிப்பு 1.54 மில்லியன் ரிங்கிட்டாகும்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!