
கோலாலம்பூர், மார்ச்-3-மலேசிய வானில் இன்றிரவு அரிதான விண்வெளி நிகழ்வாக முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது…
பரவலாக _Blood Moon_ அதாவது ‘இரத்தச் சந்திரன்’ என அழைக்கப்படும் இந்நிகழ்வு, இரவு 7.23 மணிக்கு தொடங்கி, 7.33 மணிக்கு உச்சத்தை எட்டும்.
அப்போது சந்திரன் ஆழமான சிவப்பு நிறத்தில் மிளிரும்.
கிரகணம் 10.23 மணி வரை நீடிக்கும்; ஆக மொத்தம் 3 மணி நேரங்களுக்கு மலேசியர்கள் இந்த அதிசயத்தை கண்டுகளிக்கலாம்.
எந்த சிறப்பு கருவியும் தேவையில்லை… வானத்தை நோக்கிப் பார்த்தால் போதும், சிவப்பாய் மாறும் சந்திரனை இரசிக்கலாம்.
இவ்வாண்டு மலேசியாவில் நாம் காணக்கூடிய ஒரே முழு சந்திர கிரகணம் இதுவாகும்.
மறுபடியும் 2028-ஆம் ஆண்டில் தான் இது திரும்ப நிகழும்.



