
ஈப்போ, மார்ச் -4- தஞ்சோங் மாலிமிற்கு அருகே வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 378 ஆவது கிலோமீட்டரில் டிரெய்லர் லோரி உட்பட மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் 24 வயதுடைய லோரி ஓட்டுநர் ஒருவர் மரணம் அடைந்ததோடு இதர மூவர் காயம் அடைந்தனர்.
நேற்று மாலை மணி 3.57 அளவில் இச்சம்பவம் குறித்து அழைப்புக் கிடைத்தாக பேரா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை பிரிவுக்கான துணை இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.
லோரி ஓட்டுநர் தனது இருக்கையிலேயே சிக்கிக் கொண்டதால் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்ததை மருத்துவ சுகாதார அமைச்சின் மருத்துவ பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்.
அரிசியை ஏற்றிச் சென்ற 24 வயதுடைய அந்த லோரி ஓட்டுநர் இரும்பு மற்றும் மறுசுழற்சி பொருட்களை ஏற்றிச் சென்ற இதர இரண்டு லோரிகளுடன் மோதியதால் கடுமையாக காயம் அடைந்தார்.



