
புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-10-பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில், சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக, நால்வர் இன்று காலை போலீஸில் சரணடைந்தனர்.
20 முதல் 30 வயது வரையிலான அந்நால்வரில் இருவர் பொறியியலாளர்கள் ஆவர்; ஒருவர் தொழில்நுட்பப் பணியாளர், மற்றொருவர் வேன் ஓட்டுநர்.
இதையடுத்து, புக்கிட் மெர்தாஜாம் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் அவர்களை 2 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
இதன் மூலம், இவ்வழக்கில் கைதுச் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே இரு சகோதரர்கள் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.



