
கோலாலாம்பூர், மார்ச்-11-ஆறாண்டுகளுக்கு முன்னர் திரங்கானு, டுங்குனில் SPM பரீட்சார்த்த தேர்வின்போது உள்ளாடைக்குள் iPhone கைப்பேசியை மறைத்து வைத்த மாணவி, தன்னைக் கையும் களவுமாகப் பிடித்த ஆசிரியர்களுக்கு எதிராக தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
SMK Sura பள்ளியில் நடைபெற்ற இச்சம்பவம் வாழ்வியல் அறிவியல் பாடத் தேர்வின்போது ஆசிரியர்கள் நடத்திய திடீர் சோதனையில் வெளிச்சத்துக்கு வந்தது.
எனினும், சோதனை என்றப் பெயரில் தனது தனியுரிமையை மீறியதாகக் கூறி, 2 ஆசிரியர்கள், தலைமையாசிரியர், கல்வித் தலைமை இயக்குநர், அரசாங்கம் ஆகிய தரப்புகளிடம் இழப்பீடு கோரி அம்மாணவி வழக்குத் தொடுத்தார்.
எனினும், வழக்கை விசாரித்த கோலாலாம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம், ஆசிரியர்கள் எடுத்த நடவடிக்கை நியாயமானது என்றும், தேர்வின் நம்பகத்தன்மையை காக்கும் பொறுப்பில் அவர்கள் இருந்தனர் என்றும் தீர்ப்பளித்து, வழக்கை தள்ளுப்படி செய்தது.
தேர்வில் காப்பியடிக்கும் திட்டமில்லை என்றால், எதற்காக iPhone-னை உள்ளாடைக்குள் மறைத்து எடுத்துச் செல்ல வேண்டுமென்ற கேள்வியையும் நீதிபதி முன்வைத்தார்.
இதையடுத்து, தற்போது 23 வயதான அம்மாணவி, பிரதிவாதிகளுக்கு செலவுத் தொகையாக 10,000 ரிங்கிட் செலுத்த வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரைட்டது.
தீர்ப்பை எதிர்த்து அம்மாணவி உயர் நீதிமன்றதில் மேல்முறையீட்டு செய்துள்ளார்



