
கோலாலம்பூர், மார்ச்-13-பிப்ரவரி கடைசி வரைக்குமான நிலவரப்படி, நாடு முழுவதும் lorong tikus எனப்படும் 540 சட்டவிரோத வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் தரைவழிப் பாதைகள் மட்டுமே 360 என, தேசியப் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
கோலாலம்பூர், பினாங்கு, திரங்கானு, பஹாங் தவிர்த்து 10 மாநிலங்களில் உள்ள 24 கடற்பாதைகளும் அடங்கும் என்றார் அவர்.
இந்த சட்டவிரோத வழிகள் பெரும்பாலும் கடத்தல், மனிதக் கடத்தல், சட்டவிரோதக் குடியேற்றம்,
விலங்கு கடத்தல் போன்ற குற்றங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
இதனைத் தடுக்க போலீஸ் மற்றும் பிற அமுலாக்க அமைப்புகள் கண்காணிப்பு, ரோந்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக IGP சொன்னார்.
“இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மலேசிய வருகையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வரவேற்பான இடமாகத் தொடர்ந்து இருப்பதை உறுதிச் செய்கின்றன” என்றார் அவர்.



