Latestமலேசியா

MUDA கட்சியின் புதியத் தலைவரானார் அமிரா அய்சா

கோலாலம்பூர், மார்ச்-15-இளைஞர்களின் கட்சியாக விளங்கும் MUDA-வின் புதியத் தலைவராக அமிரா அய்சா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற அக்கட்சியின் முதலாவது தேர்தலில், 25 மத்திய செயலவை உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து அமிராவை தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.

ஜோகூர், Puteri Wangsa சட்டமன்ற உறுப்பினருமான அமிரா, நிறுவனர் Syed Saddiq Syed Abdul Rahman பதவி விலகியதிலிருந்து இதுநாள் வரை இடைக்கால தலைவராகப் பணியாற்றினார்.

இப்போது 2026–2029 தவணைக்கான MUDA தலைவராக அவர் பொறுப்பேற்கிறார்.

இதனிடையே, Leben Siddarth, Dr. R. சிவபிரகாஷ் உள்ளிட்ட ஐவர் உதவித் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

MUDA, 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் ஓர் அரசியல் கட்சியாக சங்க பதிவிலாகாவால் அங்கீகரிக்கப்பட்டது.

அன்று முதல் MUDA என்றால் Syed Saddiq, Syed Saddiq என்றால் MUDA என்ற கண்ணோட்டமே காணப்பட்ட நிலையில், தற்போது Syed Saddiq-கின் நிழலில் அல்லாமல் புதியத் தலைமைத்துவத்தின் கீழ் இக்கட்சி முன்னேற வாய்ப்புக் கிட்டியுள்ளது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!