
கோலாலம்பூர், மார்ச் 18 – பினாங்கு, ஜாவி நீதிமன்ற வளாகத்தில், நேற்று பிரதமர் துறையின் சட்டம் மற்றும் அமைப்புகள் சீரமைப்புக்கான துணை அமைச்சர்
எம். குலசேகரன், சமூக செயற்பாட்டாளர் அருண் துரைசாமியை ( Dorasamy )
சந்தித்த செயலை டி.ஏ.பி எனப்படும் ஜனநாயக செயல் கட்சி ஏற்கவில்லை.
DAP யின் மூன்று உச்ச மன்ற உறுப்பினர்களான ஷேக் உமர் பகாரிப் அலி, ( Sheikh Umar Bagharib Ali ) யங் சைபுரா ஒத்மான் ( Young Syefura Othman ) ஷரெட்ஸான் ஜோஹான் ( Syahredzan Johan ) மற்றும் , புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் சியர்லீனா அப்துல் ரஷித்தும் ( Syerleena Abdul Rashid ) வெளியிட்ட கூட்டறிக்கையில் இதனை தெரிவித்தனர்.
டிஏபியின் மூத்த உறுப்பினரான குலசேகரனின் இந்தச் செயல், குறிப்பாக நாட்டின் சட்ட அமைப்பின் நேர்மை தொடர்பான பொது விவாதங்களைத் தூண்டியுள்ளது என்பதை தாங்கள் ஒப்புக்கொள்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அருண் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தபோது, அவரை மதானி அரசாங்கத்தின் துணை அமைச்சர் பதவியில் இருந்துவரும் குலசேகரன் சந்தித்ததை தாங்கள் முற்றிலும் ஏற்கவில்லை என அந்த நால்வரும் தெரிவித்தனர்.



