
கோலாலம்பூர், மார்ச் 20- நோன்பு பண்டிகையைக் கொண்டாட மக்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவதால், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று இரவுவரை போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது நேற்றைய வாகனங்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தாலும், ஒரு நாளைக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் இருந்ததாகக் பிளஸ் மலேசிய நிறுவனத்தின் நடவடிக்கைக்கான மூத்த பொது மேலாளர் முகமட் யூசோப் அப்துல் அஜிஸ் ( Mohd Yusuf Abdul Aziz ) தெரிவித்தார்.
நாளை நோன்பு பெருநாள் கொண்டாட்டம் என்பதால், தற்போதைய போக்குவரத்து நெரிசல் இன்று இரவு வரை தொடரும் என பிளஸ் எதிர்பார்க்கிறது.
நேற்று வரை, போக்குவரத்து நெரிசலைப் பெரிதும் பாதிக்கும் எதிர்பாராத சம்பவங்கள் அல்லது பெரிய விபத்து எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார்.



