
லங்காவி, மார்ச் 26 – டீசல் விலை உயர்வினால் லங்காவிக்கான பெர்ரி
பயணச் சேவை குறைக்கப்பட்டுள்ளது.
தினசரி நடைபெற்றுவந்த லங்காவிக்கான 5 பெர்ரி சேவைகள் நேற்று முதல் மூன்றாக குறைக்கப்பட்டுள்ளது.
பெர்ரி போக்குவரத்து சேவை தொடர்ந்து நடைபெறுவதோடு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெர்ரி சேவையை மேற்கொள்ளும் நிறுவனம் தெரிவித்துளளது.
தொழில்துறை டீசல் விலை 100 விழுக்காட்டிற்கும் மேல் உயர்ந்ததைத் தொடர்ந்து இந்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. இது இயக்கச் செலவுகளை அதிகரித்து, லங்காவியில் உள்ள படகுச் சேவை நடத்துனர் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியது.
தினசரி செயல்பாடுகளின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக பயணங்களைக் குறைப்பதைத் தவிர தனது தரப்புக்கு வேறு வழியில்லை என்று Ferry Line Ventures Sdn Bhd நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் பஹரின் பஹாரோம், (Baharin Baharom)
கூறினார்.
இருப்பினும், இந்தத் துறையின் உண்மையான யதார்த்தத்தை இந்தக் கண்ணோட்டம் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.
ஏனெனில், லங்காவிக்கான படகுக் கட்டணங்கள் மலேசியாவிலேயே மிகக் குறைவான கட்டணங்களில் ஒன்றாகும்; ஒரு கடல் மைலுக்குச் சுமார் 88 சென் ஆகும் என அவர் சுட்டிக்காட்டினார் .
புலாவ் தியோமான் மற்றும் புலாவ் பங்கோர் போன்ற பிற தீவுகளுக்கான வழித்தடங்களை விட இது மிகவும் குறைவு.
அங்கு ஒரு கடல் மைலுக்குச் சுமார் 2 ரிங்கிட்வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது என இன்று வெளியிட்ட அறிக்கையில் Baharin சுட்டிக்காட்டினார்.



