Latestமலேசியா

DHRRA மலேசியாவின் 20 ஆண்டுக்கால சமூக சேவை; கோலாலாம்பூரில் சிறப்பாக நடைப்பெற்ற நிகழ்ச்சி

கோலாலாம்பூர், மார்ச்-26-DHRRA Malaysia அமைப்பின் 20-ஆம் ஆண்டு விழா அண்மையில் கோலாலாம்பூரில் வெகு சிறப்பாக நடந்தேறியது.

இந்நிகழ்ச்சி, DHRRA Malaysia-வின் 20 ஆண்டுகள் சமூக சேவையை கொண்டாடவும், பெண்கள், இளைஞர்கள், B40 குடும்பங்கள், மற்றும் குடியுரிமை இல்லாதோருக்காக DHRRA Malaysia செய்த பங்களிப்பை நினைவுகூறவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

சமூகத் தலைவர்கள், பங்குதாரர்கள், விருந்தினர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

DHRRA, தனிநபர், சமூகம், கொள்கை ஆகிய மூன்று நிலைகளில் செயல்பட்டு, நீண்டகால, நிலையான, தாக்கம் உள்ள மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் செயல்படுவதாக, அதன் தலைவர் டத்தோ எஸ். சரவணன் கூறினார்.

விழாவில், கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு, பொருளாதார வாய்ப்புகள் ஆகியவற்றில் பல சமூகங்கள் இன்னும் எதிர்கொள்ளும் சவால்கள் வலியுறுத்தப்பட்டன.

முக்கியமாக, சபா, சரவாக் மற்றும் தீபகற்ப மலேசியாவில் நாடற்றவர் பிரச்னை மிகப்பெரிய கவலையாக இருப்பதாக சரவணன் சொன்னார்.

இவ்வேளையில் DHRAA Malaysia-வின் முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை என, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிலாங்கூர் சட்டமன்ற சபாநயகர் Lau Weng San கூறினார்.

அடுத்ததாக, சபா மற்றும் சரவாக் உட்பட மலேசியா முழுவதும் அடிப்படைத் தலைவர்களைப் பயிற்றுவித்தல், Community Call Centre மையங்களை வலுப்படுத்துதல், மற்றும் புதிய சவால்களை அடையாளம் காணும் outreach திட்டங்களை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் DHRAA Malaysia கவனம் செலுத்த உள்ளது.

நிகழ்ச்சியின் இறுதியில், டத்தோ’ சரவணன் மற்றும் Lau Weng San இணைந்து, “20 Years of Community Voices” என்ற கௌரவ நூலை வெளியிட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!