
கோலாலம்பூர், மார்ச் 27-பந்தாய் பாரு நெடுஞ்சாலையின் 3-வது கிலோமீட்டரில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் e- hailing மோட்டார் சைக்கிளோட்டி மோதியதைத் தொடர்ந்து அவர் மரணம் அடைந்தார்.
நேற்று பிற்பகல் மணி 1.40 அளவில் இந்த துயரச் சம்பவம் நடந்திருக்கலாம் என்றும், 10 நிமிடங்கள் கழித்துத் தமது தரப்புக்குத் தகவல் கிடைத்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் உசேய்ன் சொலேஹூடின் சொல்கிப்ளி ( Hussin Sollehuddin Zolkifly ) தெரிவித்தார்.
30 வயதுக்குட்பட்ட அந்த ஆடவர் சாலையின் இடது புறம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் பின்புறத்தில் மோதி காயத்திற்குள்ளானதால் இறந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது .
1987 ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் 41 (1) பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பான தகவல் தெரிந்த பொதுமக்கள் , விசாரணைக்கு உதவுவதற்காக, போக்குவரத்து விசாரணை அதிகாரி, ஜெய்சீலன் சுப்பையாவை 011-10252531 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.



