
பெய்ஜிங், மார்ச்-29-சீனாவில் 55 வயது தொழில் அதிபரான மாது, 25 வயது காதலரை திருமணம் செய்த சம்பவம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணமகளான Yu Wenhong, மருத்துவ அழகு துறையில் பெரும் செல்வந்தர் ஆவார்.
ஆனால் இவர் பிறப்பால் கோடீஸ்வரி அல்ல.
கிராமப்புறத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, 18 வயதில் கண்புருவத்தை பச்சைக் குத்தும் தொழிலாளியாக தொடங்கி, 2004-ல் ஹோங் கோங்கில் Young Merry Real International Group நிறுவினார்.
இந்நிலையில், ஏற்கனவே 5 முறை திருமணம் செய்தவரான Wenhong, தம்மை விட 30 வயது இளையவரான Renren எனும் இளைஞடன் கடந்தாண்டு பிற்பகுதியில் காதலில் விழுந்தார்.
மாடலிங் துறையில் வலம் வந்த காதலுனுக்கு Wenhong அடிக்கடி விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை அன்பளித்து வந்தார்.
Rolls-Royce, Mercedes-Benz சொகுசு கார்களும் அவற்றிலடங்கும்.
இந்நிலையில், இந்த காதல் ஜோடி அண்மையில் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணமகனுக்கு டௌரியாக அவர் வழங்கிய பரிசுகள் வாயைப் பிளக்க வைக்கின்றன.
ஆம், ரொக்கம், ஆடம்பர பங்களாக்கள், சொகுசு கார்கள் என சுமார் US$7.3 மில்லியன் மதிப்பிலான டௌரியை Wenhong கொடுத்துள்ளார்.
ஏற்கனவே இந்த காதல் பற்றி கருத்துரைத்த அவர் “இந்த வாழ்க்கையை நானாக ஏற்படுத்திக் கொள்ளவில்லை; எல்லாமே அதுவாகவே நடந்தது, நானும் அப்படியே ஏற்றுக் கொண்டேன்” என்றார்.
எனினும், எதிர்பார்த்தது போலவே சமூக ஊடகங்களில் இந்த காதல் ஜோடியின் திருமணம் விவாதப் பொருளாகியுள்ளது.
ஏற்கனவே வரி ஏய்ப்பு மோசடி, சந்தேகத்திற்குரிய அழகு சிகிச்சைகள் என பல சர்ச்சைகளைச் சந்தித்த இந்த கோடீஸ்வரி, தற்போது மகன் வயதில் உள்ளவரை திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
Wenhong-கின் வாழ்க்கை… செல்வம், காதல், சர்ச்சை என வண்ணக்கலவையாக உள்ளது…



